Monday, January 21, 2013

நடப்பது என்ன


அமிழ்தம்

உலகில் 'அமிழ்தம்' என்று ஒன்று இருக்குமானால் நாம் பருகும் நீரே ஆகும். அமிழ்தம் என்றால் 'இரவாது' என்று பொருள். ஏன்? நஞ்சு போக்கும் மருந்து என்றும் கூறலாம். ஒரரிவு உயிரினம் முதல் ஆறறிவு உயிரினமான மனித இனம் வரை நிர் இன்றியமையாத ஒர் பானமாகத் திகழ்கிறது. நீர் இன்றி உயிர் இல்லை. உயிர் வாழ உணவு அவசியம். அந்த உணவு உற்பத்திக்கு நீர் அவசியம். நீர் இல்லாத நிலத்தை கண்ணால் பார்த்தாலே கண்கள் வெடிக்கும். உலகமே நீர் இல்லாமல் போனால் கணினியுகத்தை வேகமாக கானும் இன்றைய நாளில், அதை விட வேகமாக நீர்யுகத்தை கான மணிதம் மறந்தது ஏன்?

'மண்ணிண்று நீரெடுத்து விண்ணின்று பொழியும் மாமழை'

நாம் வாழும் பூமி 97 விழுக்காடு கடல் நீரைக் கொண்டுள்ளது. நாம் உண்ணும் நீர் குடல் வழியாகச் சென்று உடல் முழுவதும் சுமார் 75 விழுக்காடு நிறைந்துள்ளது.

''எங்கும் தண்ணீர் பொங்கும் கடலில்,அதில் உண்ணீர் ஒரு சொட்டு தங்குவதில்லை. ஆகவே கடல் வற்றும் அளவுக்கு கனரகளை உயர்த்தவேண்டும். மனிதனால் அமைக்கபட்ட ஏரி,குளம்,குட்டைகளில் மழை பெய்யும் பொழுது  நீர் தேங்கி நிற்கிறது  இப்படி தேங்கி நிற்கும் தண்ணீர்  ஆனது பூமிக்கடியில் சென்று நீரோட்டத்தில் கலந்து நிலத்தடி நீராக மாறுகிறது. சூரிய வெப்பத்தால் வின்னுக்கு நீராவியாகச் சென்று மழையாக பொழிகிறது. வான் உயர, வான் மழை நீரால் வரப்புயர, வரப்புயர் நீரால் நெல் உயர நல் கொற்றவன் குடை உயருமாம் ஒளவை வாக்கு. அதனின் கடலே வற்றிப் போகும் என்பது தின்னம்.

ஆனால், இங்கு வற்றிப் போவது என்னவோ! காவிரி தென்பென்னை பாலாறு தமிழ்நாடு கவலையாய் பார்த்ததொரு பொருனை நதி - என்று மேவிய பல ஆறுகள் வாட திருமேனி இழந்த தமிழ்நாடு என்று பாரதியின் கூற்று இவ்வாறு சொல்லும் அளவுக்கு நீர் நிலகளை இழந்து தவிக்கிறது தமிழ்நாடு.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இன்னும் ஒரிரு ஆண்டுகளில் இந்தியாவே தண்ணீர் வளம் பெரும் தண்ணீர் பஞ்சத்தில் நிலைகுழைந்து போவது உறுதி என்கிறார் இஸ்ரோ விஞ்ஞானி திரு:கஸ்தூரி ரங்கன். (பார்க்க 23.01.2013 தினகரன் நாளிதழ் கோவை பதிப்பு பக்கம் என்: 9) ஏன் இந்த அவல நிலை ஒரு குடும்பம் அதில் குடும்பத்தலைவன், குடும்பத்தலைவியும் சரியாக ஒழுக்கமாக கடைமையை செய்யாவிட்டால் அந்த குடும்பம் பிரிந்து குழந்தைகள் அனாதைகளாக மாறி ஏன் திவிரவாதிகளாக கூட ஆவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன.

எனவே மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு தந்தையும் தாயுமாக நின்று நீர் வளத்துறையை கடமையில் இருந்து விழகாமல், அதேசமயம் அந்தக் கடமையை சொத்தையில்லாமலும், சத்தானதாகவும் செய்திட்டாலே அன்னையும் பிதாவும் முன்னரி தெய்வமாக விளங்குவதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும்.

இது வரை காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நடந்த நிகழ்வுகள்:

மேட்டூர் அனை கட்டப்பட்டது 1925 முதல் 1934 ஆம் வருடம் வரை.

1924 ஆம் ஆண்டு நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் போடப்பட்டது.
கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

1956 ஆம் வருடம் பன் மாநில நதிநீர் பங்கீட்டு சிக்கல் தீர்வுக்கன சட்டம் போடப்பட்டது.

அந்த சட்டத்திற்குட்பட்ட நடுவர் மன்றம் அமைக்க பரிந்துரை செய்தது.

முதன் முறையாக 1968ல் நடந்த காவிரி நநீர் பங்கீடு விவாத கூட்டம்  மத்திய அமைச்சர் மான்புமிகு K.ராவ் அவர்கள் தலைமையில் நடந்தது. இக் கூட்டம் 1970 ஆம் வருடம் வரை தொடர்ந்து ஜந்து முறை நடந்தது.

1956ஆம் வருட ஒப்பந்த அடிப்படையில் நடுவர் மன்றம் அமைக்க தமிழ்நாடு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.
அதற்கு கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

ஏற்றுக்கொள்ள கர்நாடக அரசுக்கு உத்திரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்த்தது. இத்துடன் கேரள அரசும் இனைந்தது. ஆனால் அப்போதைய மான்புமிகு பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களால் வாபஸ் பெறப்பட்டது.

1924 ஆம் வருட ஒப்பந்தத்தை 50 ஆண்டு கழிந்து அதாவது 1974ல், விதிமுறைகளை கடந்த ஆண்டுகளின் அனுபவரிதியாக பரிசிலனை செய்ய குறிப்பிட்டிடுருந்தது.

அனுபவ ரீதியென்றால் இரு மாநிலங்களின் பதிவேடுகளையும் காவிரி நதி நீர் உன்மை நிலை அறியும் குழுவின் (CFFT) 1972 ஆம் வருட அறிக்கையின் படி ஆக்கபூர்வமான பனி நிறைவு ஏதும் தீர்வாகமலே போய்விட்டது, நிறைவேற்றப்படவும் இல்லை, மேலும் இந்திய நதிகளை இனைப்பதற்குப் கீழ்கண்ட பலவழிமுறைகளை பொறியாளர்களும், அரசியல்வாதிகளும், சுற்றுசூழல் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

1.கங்கை - பிரம்மபுத்ரா நதிகளை காவிரி நதியுடன் இனைத்தல்.

2.தீபகற்ப நதிகளை இனைத்தல்.தென் இந்தியாவில் பாயும் மாகநதி, கோதாவரி, கிருஷ்னா, காவிரி வைகை நதிகளை இனைத்தல்.

3.கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலந்து வீணாகப்போகும் நதிகளைக் கிழக்கே திருப்பி தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களுக்குப் பயன்படுத்துதல். 

தற்பொழுது வறட்சியால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது தமிழகமே. தமிழத்தில் தொடர்ந்து வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சப்பட்டுவிட்டது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடே இத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது கங்கை, பிரம்மபுத்திரா, காவிரி நதிகள். 

தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் (National Water Development Agency (NWDA) தென்னக நதிகளை இனைக்க முழுமையான அறிக்கையினைச் சமர்பித்துள்ளது. நில அளவை செய்து முடிக்கப்பட்டு,திட்டங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகளையும் தயார் செய்துள்ளது. நதிகள் இனைப்பிற்கான மதிப்பீடும்காலகெடுவையும் தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு அந்தந்த மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்குமா என்பதனைக் காலம் பதில் சொல்ல வேண்டும்.

தென் இந்திய நதிகளை இனைத்தல்.

தேசிய நீர்வளமேம்பாட்டு நிறுவனம் (NWDA) ஒரு சுயேச்சையான அமைப்பாகும்.இந் நிறுவனம் 1982 ஆம் ஆண்டில் நடுவன் அரசால் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக பல பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு, அளவு செய்து பல புள்ளி விவரங்களை சேகரித்துள்ளது. இதன் மூலம் தென்னக நதிகள் இனைப்பு ஒரு சாத்தியமான திட்டம் என்று அறிவித்துள்ளது.

இவ்வறிக்கையின்படி மகாநதியில் 280 டி.எம்.சி. தண்ணீரும், கோதாவரி நதியில் 530 டி.எம்.சி. தண்ணீரும் மிகுதியாக உள்ளது.ஆகமொத்தம் ஆண்டிற்கு 810 டி.எம்.சி. தண்ணீர் உபரியாக ஒடிக் கடலில் கலக்கிறது. தேவைக்கு அதிகமாக உள்ள இந்த 810 டி.எம்.சி. நீரை, 3176 கி.மீட்டர் நீளம் உள்ள பெரிய, சிரிய கால்வாய்களைத் தோண்டி காவேரி மற்றும் வைகை நதியுடன் இனைக்கலாம் என்று தேசிய நீர்வளமேம்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

இவ்வினைப்பின் மூலம் காவேரியின் கல்லனைக்கு 200 டி.எம்.சி. நீர் கிடைக்க வாய்ப்புள்ளது.இதற்கு தற்பொழுது உள்ள சூழலின்(2006)படி ரூ: 60000 கோடி முதல் 70000 கோடி வரை செலவாகும் இன்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் உலகளவில் நீர்வள ஆதாரத்திற்கு ஆலோசகராக இருக்கும் டாக்டர்.இரா.க.சிவனப்பன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கேரள மாநிலத்தின் எல்லாக் காரியங்களுக்கும் பயன்படும் நீரின் அளவு போக 500 டி.எம்.சி. உபரியாக உள்ளதாக அறிவித்திருந்தார். 

தற்பொழுது ஓடும் நீர்வளத்தைக் கொண்டு தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் கேரள மாநிலத்தில் மட்டும் 1000 டி.எம்.சி நீர் மிகுதியாக உள்ளது என்று அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கேரளத்தில் ஒடும் பம்பை மற்றும் அச்சன் கோவில் நதிகலின் உபரி நீரைத் தமிழ்நாட்டின் வைப்பாறு நதிக்கு திருப்பிவிட்டால் தமிழகம் பயன்பெறும். 

இத்திட்டதிற்கு 1400 கோடி செலவும், எட்டு ஆண்டு காலத்தில் முடிக்கவும் தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு கேரள அரசு அனுமதி அளிக்கவேண்டும்.

பாண்டியாறு, புன்னம்புழா இவ்விரு நதிகளும் தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கேரளப்பகுதியில் பாய்ந்து அரபிக்கடலில் கலந்து வீணாகின்றது. 

இந்த ஆறுகளை கிழக்கே திருப்பிவிட்டால் ஈரோடு, கோவை மாவட்டங்களில் 60000 எக்டேர் பரப்புள்ள  நிலம் பாசன வசதி பெறும்.

கர்நாடக மேற்கு தொடர்ச்சி மலைக்கும், அரபிக்கடலுக்கும் இடையே உள்ள நிலப்பரப்பில் பெய்யும் பெருமழையில் 60 விழுக்காடு நீர் அரபிக்கடலில் கலந்து வீணாகின்றது. 

இந்த நீரின் அளவு 2000 டி.எம்.சி. மேட்டூர் நீர் தேக்கத்தின் கொள்ளளவு 90 டி.எம்.சி. ஆகும்.இப்படி வீணாகக் கடலில் கலக்கும் நீரின் ஒரு பகுதியைக் கிழகே திருப்பிவிட்டால் கர்நாடகத்தில் உள்ள நீர்ச்சிக்கல் தீர்ந்துவிடும்.

இந்திய நதிகள் இனைப்பு திட்டம் தற்பொழுது நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. உலகிலேயே இது ஒரு மிகப்பெரிய திட்டமாகும். முப்பதிற்கும் மேற்ப்பட்ட இனைப்பு கால்வாய்களைக் கொண்ட இத்திட்டத்தின் மதிப்பீடு 6 லட்சம் கோடியாகும். தென்னக நதிகள் இனைக்கும் பொழுது, பிரம்மபுத்திரா மற்றும் கங்கை நதிகளில் ஒடும் மிகை நீரை தெற்கில் திருப்பும் பணியும் மேற்கொள்ளவேண்டும். 

இத்திட்டம் நிறைவேறினால் 71 விழுக்காடு பாசனப் பகுதி அதிகரிக்கும், நீர்மின் உற்பத்தி 152 விழுக்காடு அதிகரிக்கும், நாட்டின் தண்ணீர் தேவையும், மின்சாரத்தின் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு பாருக்குள்ளே சிறந்த பாரத நாடாகும். அப்படி செய்யாததின் காரனமாக விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. 

நீர் ஆதாரத்தையும் இழந்து, கடவுள் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயியையும் இழக்கும் பேராபத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம்.

இவை அனைத்தும் நிகழ வேண்டும் என்றால் இந்திய அரசு சென்ரல் பப்ளிக் சர்வீஸ் (Central Public Service, Govt. of INDIA) என்ற அமைப்பை உருவாக்கி, அரசு அதிகாரிகளுக்கும் , பொதுமக்களுக்கும் இடையில் நீர் விநியோகம் ஜனநாயகப்படுத்துவதின் வழிமுறைகளை போல், நீர் பங்கீடு என்பதை, பொதுநல பனித்துறை அதிகாரிகளும், அரசியல் அல்லாத அரசு சார்ந்தவர்களும் ஜனநாயகப்படுதுவதின் வழிமுறைகளை பயன்படுத்தி நதிநீர் பங்கீட்டை விரிவாக உனர்வுபூர்வமாக ஏற்றுகொள்ளும் அரசியல் அல்லாத தலைவரை நியமித்து நீண்டகால முடிவான தொடர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினாலேயொழிய இந்த நதி நீர் பங்கீடு குனமாகாது. இந்த ஜனநாயகப்படுத்துவதின் மூலமாவது விவசாயிகள் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் ஆகாமல் தடுப்பதற்கான வழியாக அமைய வேண்டும்.